கோலாலம்பூர், பிப் 21- போலீஸ்கார ரின் பணிக்கு இடையூறு
ஏற்படுத்தியதோடு அவருக்கு எதிராக சினமூட்டும் வார்த்தைகளையும்
பிரயோகித்த குற்றத்திற்காகப் பொறியாளர் ஒருவருக்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.
தனக்கெதிரான குற்றச்சாட்டை பி. கார்த்திகேயன் (வயது 31) என்ற அந்த
பொறியாளர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனையை
வழங்கிய மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி அபராத த் தொகையைச்
செலுத்த த் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவும்
உத்தரவிட்டார்.
பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கே.வி. சுரேஷை பணி செய்யவிடாமல்
தடுக்கும் வகையில் அடையாளக் கார்டை வழங்க மறுத்த தோடு ஏய், நீ
போலீஸ்கார ரா, கவனமாக இரு என்ற அச்சுறுத்தும் வகையிலான
வார்த்தையை கார்த்திகேயேன் பிரயோகித்துள்ளார். இதன் தொடர்பில்
பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 17ஆம் தேதி) அதிகாலை 5.00 மணியளவில்
பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இக்குற்றத்தைப் புரிந்த
தாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான
சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது
இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 186வது
பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இதனிடையே, அதே இடத்தில், அதே நேரத்தில் போலீஸ் சோதனையின்
போது அடையாளக் கார்டை காட்ட மறுத்ததாக தம்மீது கொண்டு
வரப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டை கார்த்கேயன் மறுத்து விசாரணை
கோரினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகளுக்கும் மேற்போகாத
சிறைத்தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது
இரண்டு மே விதிக்க வகை செய்யும் 1990ஆம் ஆண்டு தேசிய பதிவுத்
துறை விதிமுறையின் 25(1)(என்) பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு
கொண்டு வரப்பட்டுள்ளது.
கார்த்திகேயேனை ஒரு நபர் உத்தராவாத்துடன் 800 வெள்ளி ஜாமீனில்
விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட் மகேஸ்வரி, இந்த வழக்கின்
மறு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.




