ECONOMY

மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் பதின்ம வயது பெண் பலி

20 பிப்ரவரி 2024, 11:40 AM
மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் பதின்ம வயது பெண் பலி

அலோர் ஸ்டார், பிப் 20: நேற்று ஜாலான் கூனோங் கிரியாங்கில் மோட்டார் சைக்கிள் ஒன்று லாரியின் பின்புறம் மோதியதில் பதின்ம வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரின் ஐந்து வயது சகோதரர் பலத்த காயமடைந்தார்.

அலோர் ஜங்கூஸ்யில் வசிக்கும் அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்ட நிலையில் அவருடைய தம்பியின் தலையில் இரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என கோத்தா ஸ்டார் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அமாட் சுக்ரி மாட் அயிர் தெரிவித்தார்.

“நேற்று பிற்பகல் சுமார் 2.10 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கோத்த ஸ்டார் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.

நேராகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையைக் கடந்த லாரியின் பின்புறத்தின் இடது பக்கம் மோதியதால், விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது என்றார் அமாட் சுக்ரி.

"லாரி ஓட்டுநர் சரணடைந்தார் மற்றும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவரின் இளைய சகோதரரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.