NATIONAL

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போன பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்

20 பிப்ரவரி 2024, 9:17 AM
எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போன பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்

பாலிக் பூலாவ், பிப் 20: நேற்று, தெலுக் பஹாங்கில் உள்ள பினாங்கு தேசிய பூங்காவில் நடைபயணம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காணாமல் போயிருந்தார்.

யோன்ஸ் ஒவ்காலி (37) என்பவரிடமிருந்து மாலை 6.07 மணியளவில் அவர் தொலைந்து விட்டதாகத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாநில செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"அதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் மலை ஏறுதல் மற்றும் படகு உதவி மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.

பாதிக்கப்பட்டவர், அதிகாலை 1.22 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மேல் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

பாலிக் பூலாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் மற்றும் இன்று காலை 4.58 மணிக்குத் தேடுதல் நடவடிக்கை முடிவடைந்தது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.