ECONOMY

டேசா மெந்தாரியில் தமிழர் ஒற்றுமைத் திருநாள்  பொங்கல் நன்னாள்

20 பிப்ரவரி 2024, 8:22 AM
டேசா மெந்தாரியில்  தமிழர் ஒற்றுமைத் திருநாள்  பொங்கல் நன்னாள்
டேசா மெந்தாரியில்  தமிழர் ஒற்றுமைத் திருநாள்  பொங்கல் நன்னாள்
டேசா மெந்தாரியில்  தமிழர் ஒற்றுமைத் திருநாள்  பொங்கல் நன்னாள்

செய்தி சு.சுப்பையா

எதிர்வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் டேசா மெந்தாரி 2 வது புலோக்கில் ஒற்றுமை பொங்கல் விழாச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த விழா சுங்கைவே ஸ்ரீ செத்தியா சட்ட மன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான துவான் முகமட் பாஹ்மி தலைமையில் நடைபெறுகிறது.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் துவான் லீ சியான் சுங் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்கிறார். துவான் லீ பெட்டாலிங் ஜெயா தொகுதியின் மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமாவார்.

அதே வேளையில் இந்த ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியும் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இந்தப் பொங்கல் விழாவில் சுற்றுவட்டார அரசியல் தலைவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள் என்று பரவலாக எதிர் பார்க்கப் படுகிறது.

இந்தப் பொங்கல் விழாவை டேசா மெந்தாரி ஒற்றுமை சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. டேசா மெந்தாரியில் கணிசமான அளவில் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஆகவே இவ்விழாவில் பெரும்பான்மையான இந்தியர்கள் கலந்து கொண்டு விழா வெற்றியடை பேராதரவை ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.