NATIONAL

காணாமல் போன 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்

20 பிப்ரவரி 2024, 4:45 AM
காணாமல் போன 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்

குவாந்தான், பிப்.20: ஜெராண்டுட்டில் உள்ள சுங்கை குவாலா சாட், உலு தெம்பெலிங்கில் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து நிலையில் கண்டு பிடிக்கப்பட்டான்.

அலி முஸ்தகிம் ரிஸ்மானின் உடல் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு பிற்பகல் 3.05 மணியளவில் 20 மீட்டர் தொலைவில்  18 மீட்டர் ஆழத்தில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என ஜெராண்டுட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஸ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.

“நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் அச்சிறுவன் குளிப்பதற்குத் தனது ஐந்து நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்றுள்ளார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் உடல் ஜெராண்டுட் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையில் மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.