NATIONAL

RM97,000 இழப்பை ஏற்படுத்திய மோசடி கும்பலுக்கு உதவிய நபர் கைது

19 பிப்ரவரி 2024, 8:39 AM
RM97,000 இழப்பை ஏற்படுத்திய மோசடி கும்பலுக்கு உதவிய நபர் கைது

பாலிக் பூலாவ், பிப் 19: சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றில் RM97,000 இழப்பை ஏற்படுத்திய மோசடி கும்பலுக்கு உதவியதாக நம்பப்படும் ஒருவரை கடந்த வியாழன் அன்று போலீசார் கைது செய்தனர்.

பொதுத் தகவல் மற்றும் உளவுத்துறை மூலம் தென்மேற்கு மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குழுவினால் 25 வயதுடைய இளைஞனை கைது செய்ததாகத் தென்மேற்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் கமருல் ரிசல் ஜெனால் தெரிவித்தார்.

"இணையத்தளத்தில் போஸ் லாஜு மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் மோசடி கும்பலுக்கு அந்நபர் உதவியதாக நம்பப்படுகிறது.

"விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப் பட்டவர் மொத்தம் RM97,000 உள்ளடக்கிய ஆறு பரிவர்த்தனைகளை இணையம் மூலம் செய்துள்ளார். பின்னர், அவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பின்னர் காவல்துறையில் புகார் அளித்தார்," என்று கமருல் ரிசல் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார். .

மோசடி செய்ததற்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் மேலும் விசாரணைக்காக அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.