கோலா திரங்கானு, பிப் 19: நேற்று காலை பத்து புரூக் கடற்கரையில் மூழ்கி இறந்திருக்ககூடும் என அஞ்சப்படும் சுல்கர்னைன் முகமட் ஜூபிர் (44) என்பவரை தேடும் பணி இன்று 67.8 கடல் மைல் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டது.
ரவா கடல்சார் கப்பலை (KM) பயன்படுத்தி இன்று காலை 7 மணிக்குத் தேடுதல் நடவடிக்கை தொடங்கியது என திரங்கானு மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (MAMA) இயக்குனர் கேப்டன் முகமட் கைருலனுவார் அப்துல் மஜிட் @ ரஸாலி கூறினார்.
"நேற்றைய தேடுதல் நடவடிக்கை 50.4 கடல் மைல் பரப்பளவில் இருள் மற்றும் அலைகள் காரணமாக இரவு 7 மணிக்கு முடிவடைந்தது.
"தற்போதைய வானிலை அடிப்படையில் இரண்டாம் நாள் தேடுதல் பிரிவு 67.8 கடல் மைல் பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
பொதுமக்களும் மூன்று ஜெட் ஸ்கைகளைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிக்கு உதவினார்கள் என அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் MERS 999 அல்லது திரங்கானு செயல்பாட்டு மையத்தை 09-6223657 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
– பெர்னாமா




