NATIONAL

10,000 தொழிலாளர்களுக்கு மனநல முதலுதவி பயிற்சி திட்டம் - தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்

19 பிப்ரவரி 2024, 8:28 AM
10,000 தொழிலாளர்களுக்கு மனநல முதலுதவி பயிற்சி திட்டம் - தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்

கோலாலம்பூர், பிப் 19: இந்த ஆண்டு தொழில்சார் மனநல முதலுதவி பயிற்சி திட்டத்தின் மூலம் 10,000 தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) மொத்தம் 12 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது.

தேசிய மனநல சிறப்பு மையத்தின் ஆதரவுடன் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட இத்திட்டம், குறிப்பாகப் பணியிடத்தில் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கூறினார்.

தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சகத்தின் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

"இது மனநலப் பிரச்சினைகள் தொடர்பான சமூகம் மற்றும் பணியிடத்தில் உள்ள பொதுவான கருத்தை அகற்றுவதற்கான ஒரு விஷயமாகும். இந்த திட்டத்தின் மூலம் 'உதவி தேடுவது பரவாயில்லை' என்ற செய்தியை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை பாதுகாத்தால், உற்பத்தித்திறன் மிகவும் சாதகமானதாக இருக்கும்.

"எனவே, அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக, தனியார் துறை மற்றும் PMKS (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) இந்த இலவசப் பயிற்சி வாய்ப்பைப் பயன்படுத்தி மிகவும் சாதகமான பணி சூழலை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 24வது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மாநாடு, 6வது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிவியல் மாநாட்டில் 'வேலையின் எதிர்காலம்' என்ற தலைப்பில் ஸ்டீவன் சிம் இவ்வாறு கூறினார்.

``NIOSH`` முன்பு பணியாளர் உதவித் திட்டம் உட்பட பல முன் முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பணியாளர்களின் மனநலப் பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பணி செயல்திறன் பாதிக்கப் படாமல் இருக்க உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.