ஜோகூர் பாரு, பிப் 19 : பாசிர் கூடாங் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 14 இல் ஆம்புலன்ஸுக்கு வழி விடாத ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாலை 3.30 மணியளவில் டொயோட்டா ஹைஸ் வேன் ஓட்டுநர் ஆம்புலன்ஸின் பாதையைத் தடுப்பதைக் காட்டும் 47 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது தரப்பு கண்டறிந்ததாக ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
"ஆம்புலன்ஸ் இடது பாதையில் செல்லும் வரை சைரன் அடிக்கப்பட்டு, திசை விளக்குகள் இயக்கப் பட்டிருந்தாலும், வெள்ளை வேன் வழி விடாமல் புறக்கணித்தது.
"அதைத் தொடர்ந்து, ஶ்ரீ ஆலம் மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு குறிப்பிட்ட ஓட்டுநரைக் கண்டுபிடித்து, காவல்துறை / ஆம்புலன்ஸ் / தீயணைப்பு / சிறை / சுங்கம் / சாலை போக்குவரத்து துறை வாகனத்திற்கு வழி விடாததற்காகச் சாலை போக்குவரத்து விதிகள் dit and 166/59 விதி 9(2) இன் கீழ் குற்றம் செய்ததற்காக RM300 அபராதம் விதித்தது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தொழிற்கல்வி ஓட்டுநர் உரிமம் (ஜிடிஎல்) இல்லாததற்காக 38 வயதுடைய அந்நபர் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 56(1) இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். அதே நேரத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்காக அவரிடம் ஏழு சம்மன்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
– பெர்னாமா




