ECONOMY

கிள்ளான் அரச மாநகர் கார்னிவலில் 5,000க்கும் மேற்பட்ட  வருகையாளர்கள் கலந்து மகிழ்ச்சி.

17 பிப்ரவரி 2024, 6:46 PM
கிள்ளான் அரச மாநகர் கார்னிவலில் 5,000க்கும் மேற்பட்ட  வருகையாளர்கள் கலந்து மகிழ்ச்சி.
கிள்ளான் அரச மாநகர் கார்னிவலில் 5,000க்கும் மேற்பட்ட  வருகையாளர்கள் கலந்து மகிழ்ச்சி.

கிள்ளான், பிப்.18: இங்குள்ள பண்டமாறன் விளையாட்டு வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்ற கிள்ளான் ராயல் சிட்டி கார்னிவலை  5,000க்கும் மேற்பட்ட  வருகையாளர்கள் கலந்துகொண்டு  உற்சாகமாக கொண்டாடினர்.

நேற்று முதல் மூன்று நாட்கள் நீடிக்கும் நிகழ்வை  ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூய் லிம்  அவர்களால்  தொடங்கி வைக்க, கொண்டாட்டத்தில்  டத்தோ பண்டார் டத்தின் படுக்கா நோரைனி ரோஸ்லானும் கலந்து கொண்டார்.

கிள்ளான்  அரச மாநகராட்சியாக  (MBDK) பிரகடனப்படுத்தப் பட்டதை கொண்டாடும்  இவ்விழா தொடக்கத்தின் சிறப்பம்சமாக, பார்வையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஐந்து நிமிட வானவேடிக்கை காட்சிகள் விருந்தளிக்கப் பட்டது.

பாடகர்கள் காக்கா அஸ்ரஃப், பிளாக் ஹனிஃபா, ஹசாமா  போன்ற கலைஞர்கள்  விழாவை கலகலப்பாக, கலைப்படைப்புகளை படைத்தனர் நபில் அஹ்மத் மற்றும் ஷிஹா ஜிகிர் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்மிசாம் ஜமான் ஹுரி மற்றும் பண்டமாரன் லியோங் டக் சீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நொரைனி பேசுகையில், இந்த  விழா தற்போது மாநகரமாக இருக்கும் கிள்ளான் மக்களுடன் பகிர்ந்து கொள்வதையும், கொண்டாடுவதும் நோக்கமாகக் கொண்டது என்றார்.

"இந்த திருவிழாவின் மூலம், அனைத்து மட்டங்களுக்கிடையில் ஒத்துழைப்புக்கான கொள்கலனாக இது பயன்படுத்தப்படலாம், இதன் மூலம் MBDK இன் பொன்மொழியான பெர்பாடுவான் அசாஸ் கெமக்முரான் என்பதை உணர முடியும்  என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.