ECONOMY

 மடாணி ரக்யாட் சூன் தெங்கா நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள்

17 பிப்ரவரி 2024, 10:02 AM
 மடாணி ரக்யாட் சூன் தெங்கா நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள்

ஷா ஆலம், பிப் 16: கோலா சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் மடாணி ரக்யாட் சூன் தெங்கா நிகழ்ச்சியில் பிப்ரவரி 23 முதல் 25 வரை (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மேலும், மக்களின் வசதிக்காக மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களால் சேவை கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த டிசம்பரில்  மடாணி அரசாங்கத்தின் ஒரு வருடத்தின் நிறைவு நிகழ்ச்சியாக  புக்கிட்  ஜலீலில் அரங்க வாளகத்தில் நடைபெற்ற அக்ரோ மற்றும் மெகா மடாணி விற்பனைகள் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கின.

மாநில அளவில் தொடரும் மற்றும் மண்டல வாரியாக செயல்படுத்தப்படும் திட்டத்தில் இம்முறை சிலாங்கூர், பேராக் மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகியவை அடங்கும்.

"இத்திட்டம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில நிறுவனங்களிடமிருந்து சமூகம் நேரடியாக சேவைகளைப் பெறுவதற்கான ஒரு தளமாகும்.

இம்முறை இதில் விவசாயம், உணவு பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி (TVET) ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவு செய்ய உள்ளார். இதில்  மாநில மத்திய  அரசாங்க  உயர் மட்டதலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.