ECONOMY

இஸ்ரேலின் கோரத் தாக்குதல்- 24 மணி நேரத்தில் 112 பாலஸ்தீனர்கள் பலி, 157 பேர் காயம்

17 பிப்ரவரி 2024, 7:19 AM
இஸ்ரேலின் கோரத் தாக்குதல்- 24 மணி நேரத்தில் 112 பாலஸ்தீனர்கள் பலி, 157 பேர் காயம்

காஸா, பிப் 17- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட கொடூரத தாக்குதல்கள் காரணமாக 24 மணி நேரத்தில் 112 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் காயமுற்றனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம்  7ஆம் தேதி தொடங்கி பாஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 28,775 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 68,552 பேர் காயமுற்றள்ளனர் என்ற மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி வாஃபா செய்தி நிறுவனம் கூறியது. 

மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக்குழுவினருக்கு இஸ்ரேல் அனுமதி வழங்காத காரணத்தால் கட்டிடங்களின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளனர் என்று அது தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.