ECONOMY

வார இறுதியில் எட்டு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

17 பிப்ரவரி 2024, 2:56 AM
வார இறுதியில் எட்டு இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், பிப் 17- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்றும் நாளையும்  மேலும் எட்டு  இடங்களில் நடைபெறவுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான விலையில் வழங்கும் இந்த விற்பனை இன்று சனிக்கிழமை காலை 10.00 மணி தொடங்கி கம்போங் பாரிட் சேரோங் எம்.பி.கே.கே. மண்டபம் (பெர்மாத்தாங் தொகுதி), டேசா பிங்கிரான் புத்ரா (சுங்கை பீலேக் தொகுதி), ஐ.பி.டி. சுபாங் ஜெயா (சுபாங் ஜெயா தொகுதி), தெக்காலா பூர்வக் குடியினர் கிராம விளையாட்டுத் திடல் (செமினி தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும், நாளை இந்த விற்பனை  சென்ட்ரல் உணவகம் (கோத்தா கெமுனிங் தொகுதி), செக்சன் 20, சூராவ் அல்-ஹூஸ்னா, (பத்து தீகா தொகுதி), தாமான் காஜாங் புத்ரா திடல் (காஜாங் தொகுதி) மற்றும் கம்போங ரந்தாவ் பாஞ்சாங் டேவான் பலேம்பாங் (செமெந்தா தொகுதி) ஆகிய இடங்களில நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு ‘பி‘ கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் செகி ப்ரெஷ் பேராங்காடிகளில் நடைபெறும் மலிவு விற்பனையுடன் சேர்த்து இவ்வாண்டில் மாநிலம் முழுவதும் 1,800க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஹ்சான் ரஹ்மா விற்பனையை நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.