NATIONAL

சிலாங்கூர் ரும்புன் ஒற்றுமை கார்னிவலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு 

16 பிப்ரவரி 2024, 12:50 PM
சிலாங்கூர் ரும்புன் ஒற்றுமை கார்னிவலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு 

ஷா ஆலம், பிப் 16: பிப்ரவரி 22 அன்று கோலா குபு பாரு பல்நோக்கு அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தில் உலு சிலாங்கூர் அளவில் நடைபெறும் சிலாங்கூர் ரும்புன் ஒற்றுமை கார்னிவலை கண்டு மகிழ பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் மற்றும் பார்வையாளர்களுக்கு ஃபுட்சல் போட்டிகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

"இந்த கண்காட்சியில் அணிவகுப்புகள், ஃபுட்சல் போட்டிகள், இரவு ஓட்டங்கள், ஜூம்பா போட்டிகள் மற்றும் செபாக் ராக ரிபு ஆகியவை அடங்கும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் பட்ஜெட் 2024ஐ சமர்ப்பித்த போது, பன்முகத்தன்மையை கொண்டாடவும் மாநிலத்தில் ஒற்றுமை உணர்வை தூண்டவும் இத்திட்டத்தை மந்திரி புசார் அறிமுகப்படுத்தினார்.

சிலாங்கூர் ரும்புன் ஒற்றுமை கர்னிவல் ஒன்பது மாவட்டங்களில் நடத்த RM4.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டதாக அமிருடின் கூறினார்.

இதில் மலிவு விற்பனை, நாட்டுப்புற விளையாட்டுகள், சுகாதாரப் பரிசோதனைகள், பரஸ்பர உதவி மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு உற்சாகமான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.