ஷா ஆலம், பிப் 16: கோலா சிலாங்கூர் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் மடாணி ரக்யாட் சூன் தெங்கா நிகழ்ச்சியில் பிப்ரவரி 23 முதல் 25 வரை (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும், மக்களின் வசதிக்காக மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களால் சேவை கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
கடந்த டிசம்பரில் மடாணி அரசாங்கத்தின் ஒரு வருடத்தின் நிறைவு நிகழ்ச்சிகள் புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் நடைபெற்ற அக்ரோ மற்றும் மெகா மடாணி விற்பனைகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கின.
மாநில அளவில் தொடரும் மற்றும் மண்டல வாரியாக செயல்படுத்தப்படும் திட்டத்தில் இம்முறை சிலாங்கூர், பேராக் மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகியவை அடங்கும்.
"இத்திட்டம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில நிறுவனங்களிடமிருந்து சமூகம் நேரடியாக சேவைகளைப் பெறுவதற்கு ஒரு தளமாகும்.
இம்முறை இதில் விவசாயம், உணவு பாதுகாப்பு, கல்வி மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி (TVET) ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவு செய்ய உள்ளார். இதில் மாநில மத்திய அரசாங்க உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




