NATIONAL

ஆசிய பூப்பந்துப் போட்டி- குழு நிலையிலான வெற்றியாளராக தேசிய ஆண்கள் அணி தேர்வு

16 பிப்ரவரி 2024, 8:53 AM
ஆசிய பூப்பந்துப் போட்டி- குழு நிலையிலான வெற்றியாளராக தேசிய ஆண்கள் அணி தேர்வு

ஷா ஆலம், பிப் 16 - இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில்

நடைபெற்று வரும் 2024 ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியில்

(பி.ஏ.டி.சி.) தைவானை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியதன் வழி

ஆண்கள் தேசிய அணி பி பிரிவின் வெற்றியாளராக வாகை சூடியது. காலிறுதி ஆட்டத்தில் அக்குழு சிங்கப்பூரை சந்திக்கவுள்ளது.

நேற்றிரவு நடந்த குழு நிலையிலான கடைசி ஆட்டத்தில் நாட்டின் தொழில்முறை ஆண்கள்

ஒற்றையர் வீரர் லீ ஜி ஜியா, 2023ஆம் ஆண்டு காஹ் சியங் மாஸ்டர்ஸ் சாம்பியனான

லின் சுன் யியை 21-16, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.

இருப்பினும், முன்னாள் உலக சாம்பியனான ஆரோன் சியா-சோ வூய் யிக் அணியை புதிய

இரட்டையர் ஜோடியான லீ ஜே-ஹூய் மற்றும் லீ யாங் ஜோடி 21-23 , 17-21 என்ற நேர்

செட் கணக்கில் 34 நிமிடங்களில் தோற்கடித்ததன் மூலம் தைவான் இந்த

தோல்வியை சமன் செய்தது.

இருப்பினும், தேசிய ஒற்றையர் ஆட்டக்காரரான லியோங் ஜுன் ஹாவ், லீ சியா

ஹாவோவை 21-19 மற்றும் 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து ​​தேசிய

அணியின் வாய்ப்புகளை பிரகாசமாக்கினார். தேசிய இரட்டையர்களான கோ ஸீ

ஃபெய்-நூர் இசுடின் முகமது ரும்சானி ஜோடி. மற்றொரு புதிய ஜோடியான வாங் சி லின்-

யாங் போ ஹானை 21-19, 21-14 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இதற்கிடையில், கடைசி வீரராக களமிறக்கப்பட்ட நாட்டின் ஒற்றையர்

விளையாட்டாளரான இயோஜின் ஈவ், உலகின் 39-வது தரநிலை

விளையாட்டாளரான சி யூ ஜெனிடம் 16-21, 14-21 என்ற செட் கணக்கில்

தோல்வியடைந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.