NATIONAL

உலக 5எஸ் ஹாக்கி போட்டியில் சாதனை- தேசிய ஐவர் ஹாக்கி அணிக்கு வெ.96,000 வெகுமதி

16 பிப்ரவரி 2024, 7:58 AM
உலக 5எஸ் ஹாக்கி போட்டியில் சாதனை- தேசிய ஐவர் ஹாக்கி அணிக்கு வெ.96,000 வெகுமதி

கோலாலம்பூர், பிப் 16 - தேசிய ஐவர் ஹாக்கி (5எஸ்) அணியின்

சாதனையை அங்கீகரிக்கும் வகையில் 96,000 வெள்ளியை வெகுமதியாக

வழங்கி தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் இளைஞர் மற்றும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ.

கடந்த மாதம் 28 முதல் 31 வரை ஓமான் நாட்டின் மஸ்காட்டில்

நடைபெற்ற 5எஸ் உலக க்கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடத்தைப்

பெற்றதற்காக இந்த ஊக்கத் தொகையை அவர் வழங்கினார்.

இந்த தகவலை மலேசிய ஹாக்கிச் சம்மேளம் சமூக ஊடகங்கள்

வாயிலாக வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் கூறியது. இந்த

வெகுதியை வழங்கியதற்காக அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் தேசிய

விளையாட்டு மன்றத்திற்கு (எம்.எஸ்.என்.) அது நன்றியைத் தெரிவித்துக்

கொண்டது.

மாஸ்காட்டில் பெற்ற வெற்றிக்குப் பிறகு அந்த ஹாக்கி குழுவினர் கடந்த

பிப்ரவரி 2ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்த

போது அவர்களை வரவேற்றுப் பேசிய ஹன்னா, இந்த வெற்றிக்கு

வெகுமதியாக 80,000 வெள்ளி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மலேசிய ஹாக்கி

சம்மேளனம் செலவிட்ட தொகையையும் அமைச்சு திரும்ப ஒப்படைக்கும்

என்றும் அவர் வாக்குறுதியளித்திருந்தார்.

ஓமான் ஹாக்கி அரங்கில் நடைபெற்ற உலக கிண்ண ஐவர் கால்பந்து

போட்டியின் இறுதியாட்டத்தில் ஐரோப்பாவின் பலம் பொருந்திய

அணியான நெதர்லாந்தைச் சந்தித்த மலேசிய அணி துர்திர்ஷ்டவசமாக 2-1

என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தைப்

பிடித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.