கோலாலம்பூர், பிப் 16 - கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகருக்கு 88
வெள்ளியில் தொடங்கும் ஒரு வழிப் பயணத்திற்கான அதிரடி டிக்கெட்
விற்பனையை ஏர் ஏசியா விமான நிறுவனம் வழங்குகிறது.
இந்த விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி
வரை நீடிக்கும் என்று அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
கோலாலம்பூரிலிருந்து பிற்பகல் 12.50 மணிக்கும் அல்மாட்டி நகரிலிருந்து
இரவு 8.05 மணிக்கும் விமானம் புறப்படும் என்று அது கூறியது.
மத்திய ஆசியாவுக்கான சேவையை தாங்கள் விரிவுபடுத்தவுள்ளதாக ஏர்
ஆசியா எக்ஸ் நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி
அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக அல்மாட்டி நகருக்கான
முதலாவது மலேசிய விமானச் சேவை இவ்வாண்டு மார்ச் மாதம் 14ஆம்
தேதி தொடங்கும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.
ஏர் ஆசிய எக்ஸ் நிறுவனத்தின் அதிக வரவேற்புள்ள புதிய பயணத்
தடமாக கஜகஸ்தான் விளங்குவதாக கூறிய அந்நிறுவனத்தின் தலைமை
செயல்முறை அதிகாரி பெஞ்சமின் இஸ்மாயில், கட்டுபடி விலையில்
அனைவருக்கும் பயண வாய்ப்பினை வழங்கும் கடப்பாட்டின்
அடிப்படையில் இந்த அதிரடி கட்டண குறைப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இந்த அதிரடி விற்பனைக்கான டிக்கெட்டுகளுக்கு ஏர் ஆசியா சூப்பர்ஆப்
அல்லது அந்நிறுவனத்தின அகப்பக்கம் வாயிலாக இம்மாதம் 14ஆம் தேதி
முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்.




