NATIONAL

மட்டா கண்காட்சி பங்கேற்பாளர் களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி – சுற்றுலா சிலாங்கூர்

16 பிப்ரவரி 2024, 5:08 AM
மட்டா கண்காட்சி பங்கேற்பாளர் களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி – சுற்றுலா  சிலாங்கூர்

சைபர் ஜெயா, பிப் 16 – இந்த ஆண்டு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மலேசிய

சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் (மட்டா) கண்காட்சியைப் பார்வையாளர்களுக்கு 50

சதவீதம் வரை தள்ளுபடியுடன் சுற்றுலா சிலாங்கூர் ஏற்பாடு செய்துள்ளது.

கோலா லங்காட்டில் உள்ள ஸ்பிளாஸ் மேனியா வாட்டர் பார்க், சபாக் பெர்ணமில்

உள்ள சுங்கை பாஞ்சாங் அக்ரோ டூரிசம், ரவாங் கோம்பாக்கில் உள்ள ஸ்கைலைன் லோட்ஜ், ஃபார்ம் ஃப்ரெஷ் போன்ற பல புதிய சுற்றுலா இடங்கள் சிலாங்கூரில் உள்ள பயணக் கண்காட்சியில் இடம்பெறும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி அஸ்ருல் ஷா முகமட் தெரிவித்தார்.

“கோம்பாக் உலு லங்காட் ஜியோபார்க்``யை மேம்படுத்துவோம். இது புவிசார் சமூகம்

மற்றும் புவி-உணவு கூறுகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், குவா டாமாய்

எக்ஸ்ட்ரீம் பார்க் மற்றும் நூர் லெம்பா பாங்சுன் சுற்றுச்சூழல் ரிசார்ட் போன்ற

இடங்களை அறிமுகப்படுத்துவோம்.

சிப்பாங்கில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்த சிலாங்கூர் ஹோப்-

ஆன் ஹோப்-ஆஃப் பேருந்து தொகுப்பையும் சுற்றுலா சிலாங்கூர் அறிமுகப்படுத்தும்,

என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மேலும், சமீபத்தில் ஊடக பயிற்சியாளர்களுடன் சிலாங்கூரின் இயற்கை நிலப்பரப்புகள்

மற்றும் உணவு வகைகளை ஆராய்வதற்கான ஒரு திட்டத்தை சுற்றுலா சிலாங்கூர்

ஏற்பாடு செய்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.