NATIONAL

குடும்ப நலன் பேண தாய்மார்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்

16 பிப்ரவரி 2024, 5:02 AM
குடும்ப நலன் பேண தாய்மார்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த  வேண்டும்

குவாந்தான், பிப் 16: பெண்கள் தங்கள் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்

கொள்வதற்காகத், தங்கள் உடல்நலம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தெங்கு

அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா பரிந்துரைத்தார்.

குடும்ப ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய குடும்பப்

பொறுப்பில் பெண்கள் தூண்கள் என்று அவர் கூறினார்.

பகாங் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், சர்க்கரை குறைவாக சாப்பிட

வேண்டும், காய்கறிகளை சாப்பிட வேண்டும், ஏனென்றால் ஆரோக்கியம் தான் முக்கியம்,

ஆரோக்கியம் இல்லையென்றால் நம் வீட்டை எப்படி கவனித்துக் கொள்ள முடியும்,

என்றார் துங்கு அசிசா.

மேலும், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க துங்கு அசிசா

நினைவூட்டினார். ஏனெனில் கல்வியின் மூலம் அவர்கள் வாழ்க்கையை மாற்றவும்

வறுமையை ஒழிக்கவும் முடியும் குழுந்தைகள் சிறந்த கல்வியைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால்

கல்வி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது, என்று அவர் கூறினார்.

பகாங்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்ற தனது

விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் எதிர்காலத்தில் அவர் சிறுவயதிலிருந்து

சேகரித்த தனது சொந்த சமையல் குறிப்புகளை உள்ளடக்கிய சமையல் புத்தகத்தை

வெளியிடுவார்.

இதற்கிடையில், பகாங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லாஹ்

ஷாவிற்கு தனது பாராட்டுகளைத் துங்கு அசிசா தெரிவித்தார். அவர் பல்வேறு

விஷயங்களைச் செய்வதில் எப்போதும் ஆதரவு வழங்கி ஊக்கம் அளித்துள்ளார்.

ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார். எனது கடமைகளைச்

செய்ய என் கணவர் எனக்கு நம்பிக்கை கொடுத்தார், இங்குள்ள ஒவ்வொரு மனைவிக்கும்

கணவர்தான் வலிமையான ஆதரவு என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.