ஈப்போ, பிப் 14: நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 பொது பொழுதுபோக்கு பூங்காக்கள் உருவாக்குவதை உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு பொழுதுபோக்கு பூங்காவும் தோராயமாக RM500,000 ஒதுக்கீட்டை பெறும்  என ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் இங் கோர் மிங் கூறினார்.

"தற்போது உள்ள பொது பூங்காவின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த கட்டுமான நடவடிக்கை செயல்படுத்தப்படும். இது குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் பசுமையான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், பேராக்கில் 22 பொது பொழுதுபோக்கு பூங்காக்களை உருவாக்க RM10 மில்லியனை ஒதுக்கியதாகவும், கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு முழுமையாக நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் சமூகத்தை ஈடுபடுத்தும் வகையில், மர விதைகளை நன்கொடையாக வழங்க மக்களை ஊக்குவிப்பதாகவும், பின்னர் அவற்றில் அவர்களின் குடும்பப் பெயரிடப்படும் என்றும் அவர் கூறினார்.

பொது பொழுதுபோக்கு பூங்காக்களில் ஏற்படும் நாசத்தைக் குறைக்க இத்திட்டம் செயல் படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

- பெர்னாமா