NATIONAL

கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மதித்து நடப்பீர்- சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

15 பிப்ரவரி 2024, 9:42 AM
கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மதித்து நடப்பீர்- சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப் 15 - நாட்டின் தலையாய சட்ட அமைப்பாக விளங்கும்

காரணத்தால் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு மற்றும் அரசியலமைப்புச்

சட்டத்தின் நிலையை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும்

என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

கிளந்தான் ஷரியா சட்டம் தொடர்பான சிக்கல்களைப் பொறுத்த வரை,

கூட்டரசு அரசியலமைப்பின் வரையறைக்குள் ஷரியா சட்டங்களை

இயற்றுவதற்கான ஆற்றலை மாநில சட்டமன்றங்கள் விரிவுபடுத்திக்

கொள்ள வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்

கேட்டுக் கொண்டார்.

கூட்டரசு அரசியலமைப்பு மற்றும்/அல்லது பிற தொடர்புடைய கூட்டரசு

சட்டங்களில் உள்ள சில விதிகளில் திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான

அவசியத்தை ஆராய்வதும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

ஷரியா குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்கான மாநில அரசின்

அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பில் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக

குறிப்பிட்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை

அவசியமாகிறது என அவர் குறிப்பிட்டார்.

இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற இஸ்லாமிய சமய

விவகாரங்களுக்கான 71வது தேசிய மன்றத்தின் கூட்டத்திற்குத்

தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

2019ஆம் ஆண்டு கிளந்தான் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழுள்ள 16

ஷரத்துகளை ரத்து செய்யக் கோரி இரு முஸ்லீம் பெண்கள் செய்திருந்த

முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி 8-1 என்ற

பெரும்பான்மையில் ஏற்றுக் கொண்டது.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள்,

கல்விமான்கள் மற்றும் சாதாரண மக்கள் உள்ளிட்ட தரப்பினர் தங்கள்

கோணத்தில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த சர்ச்சையில் நான் தலையிட விரும்பவில்லை. கடந்தாண்டு ஆகஸ்டு

மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற 70வது இஸ்லாமிய சமய விவகார

மாநாட்டில் நான் இட்ட உத்தரவுக்கேற்ப இஸ்லாமிய சட்டஙகளை

உருவாக்குவதில் சட்டமன்றங்களுக்கு உள்ள ஆற்றல் தொடர்பான

விவகாரங்களை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சிறப்புக் குழு இந்த

விவகாரம் மீது ஆய்வு மேற்கொண்டு வருவதாக என்னிடம்

தெரிவிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.