NATIONAL

பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் போலீஸ் வாகனம் முற்றாகச் சேதம்

15 பிப்ரவரி 2024, 8:22 AM
பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் போலீஸ் வாகனம் முற்றாகச் சேதம்

கோலாலம்பூர், பிப்15 - இங்குள்ள முத்தியாரா டாமன்சாரா எம்.ஆர்.டி. நிலையம் அருகே  போலீஸ் பந்துவான்  ரோந்துக் கார்  ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை போலீசார் உறுதிப்படுத்தினர்.

சம்பந்தப்பட்ட அந்த வாகனம் முற்றாகத்  தீக்கிரையாவதற்கு காரணமான அச்சம்பவம்  தொடர்பில் காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ளதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் நாங்கள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது  கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை போலீசார் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.