ஷா ஆலம், பிப் 15: கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய RM41.5 பில்லியன் முதலீட்டு மதிப்பை சிலாங்கூர் பதிவு செய்துள்ளதாக முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் வரை, சேவைத் துறை RM24.6 பில்லியன் மற்றும் உற்பத்தித் துறை RM16.9 பில்லியன் முதலீட்டு பதிப்பை பெற்றுள்ளதாக இங் ஸீ ஹான் கூறினார்.
"கடந்த ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க சேவைத் துறையானது RM13.48 பில்லியனைக் கொண்ட ரியல் எஸ்டேட் துறையாகும். அதைத் தொடர்ந்து தகவல் தொடர்பு (RM5.41 பில்லியன்) மற்றும் RM1.9 பில்லியன் யூட்டிலிட்டிகள் ஆகும்.
"உற்பத்தித் துறையில் RM9.75 பில்லியன்களுடன் மின்சாரத் துறை, இரும்பு தயாரிப்புகள் (RM2.65 பில்லியன்) மற்றும் RM1.18 பில்லியன் மதிப்பில் பிளாஸ்டிக்குகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கின" என்று அவர் கூறினார்.
இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் (இன்வெஸ்ட் சிலாங்கூர்) அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஹசன் அஸ்ஹாரி இட்ரிஸும் உடன் இருந்தார்.
உற்பத்தித் துறையின் கணிசமான வளர்ச்சியைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டு மதிப்பு இலக்கான RM45 பில்லியனை மாநில அரசு அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு (FDI) RM12.5 பில்லியனாக இருந்த நிலையில் உள்நாட்டு நேரடி முதலீடு (DDI) RM4.4 பில்லியனாக ஆகும்.
"எங்களுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. வேகத்தின் அடிப்படையில் முன்னர் நிர்ணயிக்கப்பட்ட RM45 பில்லியன் இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
மாநில அரசு கடந்த ஆண்டு RM45 பில்லியன் முதலீட்டு மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது, இதில் RM12 பில்லியன் உற்பத்தித் துறையும், RM32 பில்லியன் சேவைத் துறையும் அடங்கும்.
மேலும், 2022 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சிலாங்கூர் மாநிலத்தின் பங்களிப்பு 25.5 சதவிகிதம் என்ற விகிதத்தில் தேசியப் பொருளாதாரத்தின் கால் பகுதியைத் தாண்டி, முந்தைய ஆண்டை விட 0.7 சதவிகிதம் அதிகரித்து வரலாறு படைத்தது.




