ECONOMY

அமானா கட்சியின் மாநிலத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு- சிலாங்கூர் தலைவராக இஷாம் நீடிப்பு

14 பிப்ரவரி 2024, 9:43 AM
அமானா கட்சியின் மாநிலத் தலைவர்கள் பட்டியல் வெளியீடு- சிலாங்கூர் தலைவராக இஷாம் நீடிப்பு

கோலாலம்பூர், பிப்  14 - கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியின் ஒரு பகுதியாக  அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புதியவர்களை   உள்ளடக்கிய மாநிலத் தலைவர்களின் பட்டியலை பார்ட்டி அமானா நெகாரா  (அமானா)  கட்சி வெளியிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் அணி அனைத்து மட்டங்களிலும் கட்சியின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று  அமானா கட்சியின்  பொதுச் செயலாளர் முகமது ஃபைஸ் ஃபாட்சில் கூறினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு கட்சி இயந்திரத்தை வலுப்படுத்துவதையும்  அதே நேரத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு மக்களின்  ஆதரவை அதிகப்படுத்துவதையும் இந்நியமனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த நியமனம் அமானா அரசியலமைப்பின் (திருத்தம் 2023) விதிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.  அமானா கட்சியின் மாநிலத்  தலைவர்களின்  நியமனத்தில்  தேசிய தலைமைக் குழு தனது  விவேகத்திற்குட்பட்டு  முடிவெடுக்க இந்த விதி அனுமதிக்கிறது

ஜனநாயக நடைமுறை கட்சிக்குள் தொடர்ந்து செழித்தோங்குவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக இந்த நியமன விவகாரத்தில்  பிராந்திய மட்டத்தில் உள்ள அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது   என்று அவர் இன்று அமானாவின் முகநூல் வழி வெளியிட்ட   ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அமானாவின் மாநில தலைவர்களின் முழு பட்டியல் பின்வருமாறு:

• ஜோகூர்: அமினுல்ஹுடா ஹாசன்

• கெடா: முகமது அஸ்மிருல் அனுவார் அரிஸ்

• கிளந்தான்: அட்லி ஜஹாரி

• மலாக்கா: டத்தோ அஷ்ரப் முக்லிஸ் மிங்காட்

• நெகிரி செம்பிலான்: டத்தோ எம்.கே. இப்ராஹிம் அப்துல்  ரஹ்மான்

• பகாங்: முகமது ஃபாட்ஸ்லி முகமது ரம்லி

• பேராக்: டத்தோ அஸ்முனி அவி

• பெர்லிஸ்: வான் கைரிஸால் வான் காசிம்

• பினாங்கு: முகமது ஃபைஸ் ஃபட்சில்

• சபா: லாஹிருல் லாதிகு

• சரவாக்: அபாங் அப்துல் ஹலீல் அபாங் நைலி

• சிலாங்கூர்: இஷாம் ஹாஷிம்

• திரங்கானு: முகமது ஹாஸ்பி மூடா

• கூட்டரசுபிரதேசம்: காலிட் அப்துல் சமாட்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.