NATIONAL

செம்பனை தோட்டத்தில் இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது

13 பிப்ரவரி 2024, 8:25 AM
செம்பனை தோட்டத்தில் இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது

ஷா ஆலம், பிப் 13: இன்று பிற்பகல் கம்போங் தோக் மூடா காப்பார், கிள்ளான் அருகே உள்ள செம்பனை தோட்டப் பகுதியில் இலகுரக விமானம் விழுந்து நொறுங்கியது.

மதியம் 1.56 மணி அளவில் தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து உறுப்பினர்களை அங்கு அனுப்பியதாகவும் சிலாங்கூர் ஜேபிபிஎம் செயற்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மேலும் அவர் தரப்பு விரைவில் இதன் தொடர்பில் அறிக்கை வெளியிடும்.

இந்த விபத்தில் சிக்கியவர்களின் சமீபத்திய நிலை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.