ECONOMY

கடை வீட்டில் கருகிய நிலையில் முதியவரின் உடல் கண்டெடுப்பு

12 பிப்ரவரி 2024, 8:05 AM
கடை வீட்டில் கருகிய நிலையில் முதியவரின் உடல் கண்டெடுப்பு

ஈப்போ, பிப் 12- இரண்டு மாடி கடை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் செயலிழப்புக்கு ஆளான முதியவர் ஒருவர் கருகி மாண்டனர். இச்சம்பவம் மஞ்சோங், ஆயர் தாவாரில் உள்ள கம்போங் பாருவில் நேற்றிவு நிகழ்ந்தது.

இந்த தீ விபத்து தொடர்பில் இரவு மணி 11.41 அளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஆயர் தாவார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சித்தியவான் மற்றும் மஞ்சோங் தீயணைப்பு நிலைய உறுப்பினர்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அகமது கூறினார்.

இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஆயர் தாவார், பெக்கான் பாரு, தெலுக் இந்தான் மற்றும் பந்தாய் ரெமிஸ் தன்னார்வலர் தீயணைப்புக் குழுவினரும் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.

இந்த தீபத்தில் பலியானவர் உடல் செயலிழப்புக்கு ஆளான 90 வயது லு லெங் வியோன் என அடையாளம் காணப்பட்டது. அவரின் உடல் அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள அறை ஒன்றின் கதவருகே அதிகாலை 3.35 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது  என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த கடை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.