ECONOMY

இணையம் வழி கடன் பாக்கியை அறிந்துகொள்ள பதிவு செய்வீர்! ஹிஜ்ரா உறுப்பினர்களுக்கு அறிவுறுத்து

12 பிப்ரவரி 2024, 3:49 AM
இணையம் வழி கடன் பாக்கியை அறிந்துகொள்ள பதிவு செய்வீர்! ஹிஜ்ரா உறுப்பினர்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், பிப் 12- யாயாசான் ஹிஜ்ரா உறுப்பினர்கள் தங்கள் கடன் பாக்கியை இணையம்  வாயிலாக சரிபார்த்துக்  கொள்ளலாம்.  இந்நோக்கத்திற்காக அவர்கள்  http://mikrokredit.selangor.gov.my/ என்ற இணைப்பின் வாயிலாக  தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த பதிவு நடவடிக்கை  தொடர்பில் உதவி தேவைப்படுவோர் அருகிலுள்ள ஹிஜ்ரா கிளைகளில் உள்ள கடன் வசூலிப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.  அல்லது https://www.hijrahselangor.com/risalah-skim-hijrah…/ என்ற இணைப்பை அழுத்தி ஹிஜ்ரா சிலாங்கூர் கடன் தொடர்பான மாதிரி  வழிகாட்டி பிரசுரத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் என  மாநில அரசின் வர்த்தக கடனளிப்பு நிறுவனம் தனது முகநூல்  பதிவில் கூறியது.

கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஹிஜ்ரா அறவாரியம் சிறிய அளவில் வர்த்தகத்தை தொடங்க விரும்புவோர் மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வோருக்கு மூலதனக் கடனுதவியை வழங்குகிறது.

இந்த ஹிஜ்ரா அறவாரியம் ஐ- பிஸினஸ், நியாகா டாருள் ஏஹ்சான் (நாடி), ஸ்கிம் கோ டிஜிட்டல், ஜீரோ டு ஹீரோ ஆகிய கடனுதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இன்னும் திரும்பப் பெறாமலிருக்கும் 10 கோடி வெள்ளி கடன் தொகையை வசூலிப்பதில் தாங்கள் தீவிரமாக ஈடுபடவுள்ளதாக ஹிஜ்ராவின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மேரியா ஹம்சா கடந்த ஜனவரி 11ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்த தொகை 16,000 கடனாளிகளின் கணக்குகளை உட்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர்,  புதியவர்களுக்கு கடன் வழங்குவதற்கு ஏதுவாக அக்கடன்களை திரும்ப வசூலிக்க வேண்டியுள்ளது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.