ECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை நாளை மூன்று இடங்களில் நடைபெறுகிறது

12 பிப்ரவரி 2024, 3:37 AM
மாநில அரசின் மலிவு விற்பனை நாளை மூன்று இடங்களில் நடைபெறுகிறது

ஷா ஆலம், பிப் 12- சிலாங்கூர் விவசாய   மேம்பாட்டுக் கழகத்தால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை நாளை 13ஆம் தேதி  மூன்று தொகுதிகளில் நடைபெறும்.

சூராவ் முஜாஹிரின் ஜாலான் நெனாஸ் ( மேரு தொகுதி), புக்கிட் பாங்காங் பூர்வக்குடியினர் கிராம சமூக மண்டபம் (தஞ்சோங் சிப்பாட் தொகுதி) மற்றும் புக்கிட் ரஹ்மான் புத்ரா கூடைப்பந்து மைதானம் (பாயா ஜெராஸ்  தொகுதி) ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறும்

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இந்த விற்பனை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு  பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பின்னர்  பிப்ரவரி 13ஆம் தேதி மலிவு விற்பனை மீண்டும் நடைபெறும் என்று   பி.கே.பி.எஸ். முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

செகி ப்ரெஷ் பேரங்காடி  கிளைகள் நீங்கலாக  மாநிலம் முழுவதும்   1,800க்கும் மேற்பட்ட இடங்களில் மலிவு விற்பனையை இவ்வாண்டு நடத்த  மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான  சமீபத்திய தகவல்களை முகநூல் வழி அல்லது விற்பனைச் சுவரொட்டியில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன்  மூலம் அல்லது http://linktr.ee/myPKPS இணைப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.