ECONOMY

ஆசிய பூப்பந்துப் போட்டிக்கான இலவச டிக்கெட்டுகளை செவ்வாய்கிழமை முதல் பெறலாம்

11 பிப்ரவரி 2024, 8:46 AM
ஆசிய பூப்பந்துப் போட்டிக்கான இலவச டிக்கெட்டுகளை செவ்வாய்கிழமை முதல் பெறலாம்

ஷா ஆலம், பிப் 11-  இவ்வாண்டுக்கான ஆசிய  பூப்பந்து அணி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இலவச டிக்கெட்டுகளை  பொதுமக்கள் வரும்  செவ்வாய்க்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம்.

அதிர்ஷ்டசாலிகள் போட்டிக்கு பின்னால் விளையாட்டாளர்கள் புரியும்  பிரத்தியேகச் செயல்களை ரசிக்கும் அனுபவத்தை வாய்ப்பை பெறுவார்கள் என்று  சிலாங்கூர் விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) முகநூலில் அறிவித்தது.

2024 சாம்பியன்ஷிப் போட்டியில் ஆசியாவின் சிறந்த பேட்மிண்டன் வீரர்கள் அபார ஆட்டத்தை காண்பதற்கு ஏதுவாக  இலவச டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.

இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கான முறை  எளிதானது. நீங்கள் @batc.asia @msn selangor @victormalaysia_official பக்கத்தை 'லைக்' செய்ய வேண்டும். பின்னர் இந்த டிக்கெட்டை ஏன் வெல்ல விரும்புகிறீர்கள் என்று கருத்து தெரிவித்து உங்கள் இரு நண்பர்களை 'டேக்' செய்ய வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

இந்த ஆசிய பூப்பந்துப் போட்டியை   வரும் பிப்ரவரி 13 முதல் 18 வரை செத்தியா ஆலம்  மாநாட்டு மையத்தில் சிலாங்கூர் மீண்டும் நடத்துகிறது.

விளையாட்டாளர்கள் தாமஸ் மற்றும் உபர் கிண்ணப் போட்டிக்கு தங்களைத்  தயார்படுத்திக் கொள்வதற்கான  களமாக விளங்கும் இந்த பிரசித்தி  போட்டியில்   உலகத் தரம் வாய்ந்த பூப்பந்து நட்சத்திரங்கள் உட்பட  300க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிடுவார்கள் என்று  விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி முன்னதாகக்  கூறியிருந்தார்.

2022 ஆம் ஆண்டு தொடங்கி  ஆசியா பூப்பந்து சம்மேளனம்  மற்றும் மலேசிய பூப்பந்து சங்கத்துடன் இணைந்து சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் இந்தப் போட்டியை நடத்தி வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.