ECONOMY

தனியார் வீடுகள் சுற்று பயணிகளுக்கு வாடகை விடும் (ஹோம்ஸ்டே) குளியலறையில் கேமரா

10 பிப்ரவரி 2024, 2:17 PM
தனியார் வீடுகள் சுற்று பயணிகளுக்கு வாடகை விடும் (ஹோம்ஸ்டே) குளியலறையில் கேமரா

ஜார்ஜ் டவுன், பிப். 10 — ஒரு  ஹோம் ஸ்டே குளியலறையில் ஈரப்பதமூட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய கேமராவைக் கண்டறிந்த பெண் ஒருவரிடமிருந்து புகாரைப் பெற்றதை போலீசார் உறுதிப் படுத்தியுள்ளனர்.

தீமோர் லாவுட் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஸ்லாம் அப் ஹமித் கூறுகையில், ஒரு நபரின் அந்தரங்கத்தை வேவு பார்த்த அல்லது அவமதித்த குற்றவியல் சட்டத்தின் 509  பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப் பட்டுள்ளது.

24 வயதான உள்ளூர்ப் பெண் தன் மூன்று நண்பர்களுடன் ஹோம்ஸ்டேக்கு பிப்ரவரி 5 அன்று வீட்டை வாடகைக்கு எடுத்து (செக்-இன்) செய்ததாக அவர் கூறினார்.

"பிப்ரவரி 6 அன்று இரவு 8 மணியளவில், புகார்தாரர் குளியலறையில் உள்ள கொள்கலனில் ஒரு கேமராவை மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்ததாக  புகார் கூறினார்.

"புகார்தாரர் கேமராவை வெளியே எடுத்து, ஜெலுத்தோங் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்வதற்கு முன், ஹோம் ஸ்டே நிர்வாகத்திடம் புகார் செய்தார்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.