NATIONAL

தாயை அடித்து காயப்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

9 பிப்ரவரி 2024, 11:25 AM
தாயை அடித்து காயப்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

சுகாய், பிப் 9: இன்று காலை கம்போங் பாரு, பெல்டா ;நிரம் 1, ஜபோரில் தாயை அடித்து காயப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக கெமாமன் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

மேலும், 64 வயதான பாதிக்கப் பட்டவருக்குச் சிகிச்சை அளித்த பகாங்கின் செம்பிறை சங்க ஆம்புலன்ஸ் பிரிவின் அதிகாரியிடமிருந்து ``MERS 999`` லைன் மூலம் சம்பவம் தொடர்பான அறிக்கையை அவரது தரப்பு பெற்றதாக ஹன்யான் கூறினார்.

"இன்று காலை 9 மணியளவில், அந்நபர் தன் தாயை வெறித்தனமாக தடியால் அடித்ததாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் கைகளிலும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டன.

"பாதிக்கப்பட்டவர் செனே சுகாதார கிளினிக்கில் ஆரம்ப சிகிச்சையைப் பெற்றார் மற்றும் கெமாமன் மருத்துவமனைக்குப் மேற்படி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 இன் கீழ் இரண்டு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் ஹன்யன் கூறினார்.

குற்றவியல் அச்சுறுத்தல்களுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 மற்றும் பாதிக்கப் பட்டவருக்குக் காயம் ஏற்படுத்தியதற்காக அதே சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.