NATIONAL

டிராகன் (கடல்பாம்பு), ஸ்திரத்தன்மை, விசுவாசம், நேர்மை மற்றும் வலிமை ஆகியவற்றின் அடையாளம்

9 பிப்ரவரி 2024, 11:03 AM
டிராகன் (கடல்பாம்பு), ஸ்திரத்தன்மை, விசுவாசம், நேர்மை மற்றும் வலிமை ஆகியவற்றின் அடையாளம்

ஷா ஆலம், பிப் 9: இவ்வாண்டு சீனப் புத்தாண்டின் அடையாளமான டிராகன் (கடல்பாம்பு), ஸ்திரத்தன்மை, விசுவாசம், நேர்மை மற்றும் வலிமை ஆகியவற்றின் கலவையுடன் தனித்துவமான தாகக் கருதப் படுகிறது.

மேலும், இந்த அடையாளம் ஞானம் மற்றும் செழிப்பு என்று பொருள்படும். இந்த சின்னம் நாடு வலுவாகவும் நிலையானதாகவும் மாறி கொண்டு வரும் இச்சமயம் சரியான நேரத்தில் அமைந்துள்ளது என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மக்கள் மற்றும் நாடு செழிப்பு அடைய இதுவே அடிப்படையாகும் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சீனப் புத்தாண்டை ஒட்டி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

"மற்ற தரப்புகளை போன்று வார்த்தைகளில் மட்டுமல்ல, நேர்மையான ஒற்றுமையின் தன்மை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மாநில மற்றும் நாட்டின் பொருளாதார திறனை உயர்த்தத் தொடங்குவதை நிரூபித்துள்ளது."

இந்த ஆண்டு பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் என்றும், சீன சமூகம் வார இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பங்களுடன் நேரத்தை செலவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

கொன்பூசியஸின் (Confucius) மிக முக்கியமான கூறுகளில் குடும்ப உணர்வு மற்றும் பெற்றோருக்கு கீழ்ப்படிவது முக்கியத்துவம் ஆகியவை பண்டிகையில் எப்போதும் சிறப்பிக்கப்படும் அம்சங்கள் என்று அமிருடின் மேலும் கூறினார்.

"தியோங் வா சமூகத்திற்குக் குறிப்பாகச் சிலாங்கூர் மற்றும் மலேசியா முழுவதும் உள்ளவர்களுக்குச் சீனப் புத்தாண்டு 2024 நல்வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.