புத்ராஜெயா, பிப் 8: ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை 5வது தொற்றுநோயியல் வாரம் 2024இல் டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 3,969ஆக அதிகரித்துள்ளது.
டிங்கிக் காய்ச்சலால் எந்தவொரு உயிரிழப்பும் குறிப்பிட்ட கால கட்டத்தில் பதிவாகவில்லை என சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 11,127 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 18,427ஆக அதிகரித்துள்ளது என டாக்டர் முகமட் ராட்ஸி கூறினார்.
மேலும், 180 ஹாட்ஸ்பாட் இடங்கள் எனப்படும் அதிக தொற்று உற்பத்தி மையங்கள் பதிவாகியுள்ளன. அதில் சிலாங்கூரில் (143), கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் (20), நெகிரி செம்பிலானில் (7), பேராக்கில் (4), பினாங்கில் (3) மற்றும் பகாங், சபா மற்றும் சரவாக்கில் தலா ஒரு பகுதி ஆகும்.
-பெர்னாமா




