NATIONAL

எரிசக்தி மாற்றம் மற்றும் பொது பயன்பாட்டு அமைச்சு இனி பெட்ரா என அழைக்கப்படும்

8 பிப்ரவரி 2024, 6:31 AM
எரிசக்தி மாற்றம் மற்றும் பொது பயன்பாட்டு அமைச்சு இனி பெட்ரா என அழைக்கப்படும்

புத்ராஜெயா, பிப் 8 - எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுபயன்பாட்டுத் துறை

அமைச்சு இனி எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு அல்லது

பெட்ரா என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்.

இந்த பெயர் மாற்றப் பரிந்துரையை துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம்

மற்றும் பொது பயன்பாட்டுத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ பாடில்லா

யூசுப் பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரை நேற்றைய அமைச்சரவைக்

கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எரிசக்தி மற்றும் நீர் வளத் துறைகளில் உருமாற்றத்தைக் கொண்டு

வருவதில் அமைச்சு கொண்டுள்ள அக்கறை மற்றும் பொறுப்புகளை

பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றம் அமைந்துள்ளதாகப் பெட்ரா

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அமைச்சின் பணிகள் மற்றும் செயல்பாடுகளின் வாயிலாக அரசாங்கம்

நிறைவேற்ற விரும்பும் அபிலாஷைகளைப் பொது மக்கள் எளிதாகப் புரிந்து

கொள்ளும் நோக்கில் இந்த பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என அது

தெரிவித்தது.

பெட்ரா என்ற இந்த சுருக்கப் பெயர் அமைச்சு, அமைச்சின் துறைகள்

மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மத்தியில்

நடத்தப்பட்ட போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மொத்தம் 105 பரிந்துரைகள் பெறப்பட்ட வேளையில் அதில் பெட்ரா என்ற

சுருக்கப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அமைச்சின் பெயரில் உள்ள

எழுத்துகளின் ஒருங்கிணைப்பாகப் பெட்ரா என்ற வாசகம் விளங்குகிறது

என்று அமைச்சு குறிப்பிட்டது.

எங்கள் வாழ்விலும் மக்களின் நல்வாழ்விலும் முக்கிய அங்கமாக

விளங்கும் எரிசக்தி மற்றும் நீர் வளத்தை அமைச்சு எப்போதும் ஆதரித்து வரும்.பெட்ரா என்ற பெயர் இனி அமைச்சின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் என அது மேலும் கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.