ஷா ஆலம், 7: இன்று காலை 8.19 மணியளவில் தாமான் தாசிக் ஷா ஆலமில் ஓர் ஆணின் சடலம் மிதப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
ஆரம்ப விசாரணையில் எந்த அடையாள ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும், இடது தோளில் பிசிஜி ஊசி இல்லாததால் அந்நபர் வெளிநாட்டவர் என்று சந்தேகிக்க படுவதாகவும் ஷா ஆலம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“இறந்தவரின் உடலில் சிலாங்கூர் தடயவியல் துறை நடத்திய பரிசோதனையில் வலது மற்றும் இடது கழுத்து பகுதிகளில் சிராய்ப்புகள் மற்றும் கன்னங்கள், மூக்கில் சிறிய காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
“இறந்தவரின் உடலில் மரணத்தை ஏற்படுத்தக் கூடும் பிற காயங்கள் எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நாளை காலை உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் படவுள்ளதாக முகமட் இக்பால் கூறினார்.
"இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்த பட்டுள்ளது. மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அகமட் ஃபஸ்லின் ரஸ்லியை 012-5113584 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
- பெர்னாமா




