NATIONAL

நான்கு நாட்களுக்கு கனரக வாகனங்கள் சாலையில் செல்ல தடை

7 பிப்ரவரி 2024, 3:09 AM
நான்கு நாட்களுக்கு கனரக வாகனங்கள் சாலையில் செல்ல தடை

காஜாங், பிப் 7: சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு பிப்ரவரி 8, 9, 12 மற்றும் 13 ஆகிய நான்கு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோர் அல்லது விடுமுறைக்குச் செல்ல விரும்புவோருக்குச் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) அமலாக்கத் துறையின் மூத்த இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

நேற்று டிரான்ஸ்நேஷனல் எக்ஸ்பிரஸ் டெப்போவில் பேருந்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில், "தடையை பின்பற்றாத எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

கடந்த சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள 54 டெப்போக்களில் 361 விரைவுப் பேருந்துகளை ஜேபிஜே ஆய்வு செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.

மொத்தம் 12 விரைவு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மேலும் 10 பேருந்துகள் தொழில்நுட்ப விதிமுறைகளை மீறியதற்காக வாகனப் பயன்பாடு தடை அறிவிப்புக்கு (பிஜி1) உட்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமில்லாமல், ஒட்டுனர் மற்றும் பஸ் நிறுவனத்தின் சம்மன்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக லோக்மேன் கூறினார்.

பள்ளி விடுமுறை காலம் முழுவதும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

ஜேபிஜே இதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும் சட்டங்கள், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், உரிமையாளர்கள் மற்றும் விரைவு பேருந்து ஓட்டுநர்களுடன் சமரசம் செய்யாது என்றும் அவர் கூறினார்.

"அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான சாலை முறையை உறுதி செய்வதற்காக அமலாக்க மற்றும் கடுமையான நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.