NATIONAL

2023ஆம் ஆண்டு முழுவதும் விபத்துக்களால் 6,080 இறப்புகள் பதிவு

7 பிப்ரவரி 2024, 2:42 AM
2023ஆம் ஆண்டு முழுவதும் விபத்துக்களால் 6,080 இறப்புகள் பதிவு

கோலாலம்பூர், பிப் 7: நாட்டில் 2023 ஆம் ஆண்டு முழுவதும் விபத்துக்களால் 6,080

இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஒரு நாளில் சுமார் 17 முதல் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன என

சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர்

டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

இந்த பிரச்சனை தீவிரமானது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களால் 68 முதல் 70

சதவிகிதம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன," என்று அவர் பெர்னாமா டிவியில் ருவாங் பிச்சாரா நிகழ்ச்சியில் கூறினார்.

சாலை விபத்துகளின் விகிதத்தைக் குறைப்பதற்காக, ராயல் மலேசியன் காவல்துறையின்

புலனாய்வு மற்றும் போக்குவரத்து மேலாண்மைத் துறை போன்ற பல்வேறு

நிறுவனங்களுடன் ஒத்துழைத்து பயனர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது உட்பட

பல்வேறு முயற்சிகள் அவரது தரப்பால் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

இருப்பினும், பல்வேறு பரிசுகளை வழங்கும் சில தரப்பினரின் ஸ்பான்சர்ஷிப்

காரணமாகச் சட்டவிரோதப் பந்தயத்தின் சாத்தியத்தை லோக்மன் நிராகரிக்கவில்லை.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.