NATIONAL

ஹன்னா இயோவுக்கு எதிரான அவதூறு வழக்கை விரிவுரையாளர்  வாபஸ் பெற்றார்

7 பிப்ரவரி 2024, 2:37 AM
ஹன்னா இயோவுக்கு எதிரான அவதூறு வழக்கை விரிவுரையாளர்  வாபஸ் பெற்றார்

கோலாலம்பூர், பிப் 7 - இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவுக்கு எதிரான அவதூறு வழக்கை  வட மலேசிய பல்கலைக்கழகத்தின் (யு.யு.எம்.) விரிவுரையாளர் டாக்டர் கமாருல் ஜமான் யூசோப் வாபஸ் பெற்றார்.

வழக்கை ரத்து செய்யும்  அறிக்கையை கமாருல் ஜமான்  கடந்த ஜனவரி 30ஆம்  தேதியன்று  நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ததைச் சிமாம்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹன்னா உறுதிப்படுத்தினார்.

மேலும் புதிதாக மனுத் தாக்கல் செய்ய சுதந்திரம் இல்லை என்பதோடு 5,000 வெள்ளியையும் அவர் ஹன்னாவுக்குச் செலுத்த வேண்டும்.

சபா தேர்தல்  பிரச்சாரத்தின் போது நான் மத தந்திரங்களை கையாண்டேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  எனது படம் இடம்பெற்ற பதாகையுடன்   கடந்த 2020ஆம் ஆண்டில் கமாருல் ஜமான் 'மதத்தைப் பயன்படுத்தி மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதா?' என்றக் கருத்தைப் பதிவிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டார்.

அவர் இந்த அவதூறு வழக்கை வாபஸ் பெறுவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாக மட்டுமின்றி  பிரச்சாரத்தின் போது  இனம் மற்றும் சமயத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற எனது நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அவர் கூறினார்.

அவதூறு வழக்கை வாபஸ் பெறும்  கமாருல் ஜமானின் முடிவை  தாம் வரவேற்பதாகவும் அமைச்சர் ஹன்னா சொன்னார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சபா தேர்தலின் போது  வெளியான முகநூல் பதிவு தொடர்பில்  ஹன்னா மீது கமாருல் ஜமான் வழக்குத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.