சுபாங் ஜெயா, பிப் 6: உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் ஸ்பாட்-ஐ போர்ட்டல் மூலம் பொதுமக்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து பொருட்களின் விலை குறித்த எளிதாகப் புகார் அளிக்கலாம்
இந்த போர்டல், பயனர்கள் பொருட்களின் தகவல் மற்றும் அத்தியாவசிய மற்றும் கட்டுப்பாட்டு பொருட்களின் விலைகளை அணுக அனுமதிக்கிறது என மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் இயக்குனர் முகமட் சுஹைரி மாட் ராடே தெரிவித்தார்.
"மக்கள் புகார்கள் அல்லது தகவலுக்காக இந்த தளத்தை நாடுவதற்கு முன்பு தங்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
"வியாபாரிகளுக்கு க்யூ ஆர் குறியீடு சுவரொட்டிகளும் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சட்டங்கள் மற்றும் விலைக் கட்டுப்பாட்டு பொருட்கள் தொடர்பான தகவல்களை அணுக முடியும். அவர்கள் விதிகளை பின்பற்றாததற்கு எந்த காரணமும் இல்லை," என்று அவர் கூறினார்.
இன்று ஶ்ரீ கெம்பாங்கன், பூச்சோங்கில் உள்ள பசார் ராயா என்எஸ்கேவில் பண்டிகைக் கால அதிகபட்ச விலை திட்டத்துடன் இணங்குவதற்கான ஆய்வு பயணத்தை நடத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒன்பது நாட்கள் மேற்கொள்ளப்படும் பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டத்தின் போது சில்லறை கடைகள் உள்பட மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 200 QR குறியீட்டு சுவரொட்டிகளை விநியோகிக்கவும் அவர் இலக்கு வைத்துள்ளார்.
"இந்தத் தளம் நாடு முழுவதும் செயல்படுத்த படுவதற்கு முன்பு சிலாங்கூர் முன்னோடியாக இருக்கிறது. பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்றால், வர்த்தகர்கள் வழங்கும் விவரங்கள் சரிபார்ப்பதற்கு நாங்கள் 'ரஹ்மா' அணுகுமுறையைப் பயன்படுத்துவோம்.
வியாபாரிகள் முறைகேடு செய்தது தெரிய வந்தால், முதலில் ஆலோசனை வழங்கப்படும், இரண்டாவது முறை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.




