NATIONAL

பண்டிகை கால உச்சவரம்பு  விலை  திட்டத்தில் 11 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன

6 பிப்ரவரி 2024, 9:36 AM
பண்டிகை கால உச்சவரம்பு  விலை  திட்டத்தில் 11 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன

சுபாங் ஜெயா, பிப் 6: சீனப் புத்தாண்டு 2024 கான பண்டிகைக் கால உச்சவரம்பு  விலைத் திட்டத்தில் (SHMMP) மொத்தம் 11 வகையான பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட  விலைப் பொருட்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இத்திட்டம் பிப்ரவரி 14 வரை அமலில் இருக்கும். அதில் பூண்டு, சிவப்பு முள்ளங்கி, இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சி மற்றும் முள்ளங்கி ஆகிய பொருட்கள் அடங்கும் என நுகர்வோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், அப்பட்டியலில் இறக்குமதி செய்யப்பட்ட உருண்டை முட்டைக்கோஸ் (இந்தோனேசியா மற்றும் சீனா பெய்ஜிங் தவிர்த்து), உருளைக்கிழங்கு (சீனா), உயிருள்ள பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன என டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.

"அதனை தவிர, வெள்ளை இறால் மற்றும் வெள்ளை பவால் (bawal) மீன்களும் பட்டியலில் உள்ளன," என இன்று என்எஸ்கே பல்பொருள் அங்காடிக்கு வருகை புரிந்த போது அவர் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களும் விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாபத் தடைச் சட்டம் 2011-ன் கீழ் கட்டுப்படுத்தப்பட்டு, சீனப் புத்தாண்டின் போது நான்கு நாட்களுக்கு முன்பும், பண்டிகை நாளிலும், பண்டிகைக்குப் பிறகு நான்கு நாட்களுக்கும் அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், 276 அமலாக்க அதிகாரிகளைத் ஒன்றிணைத்து விலைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதைச் சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் சரிபார்க்கும் என்று ரிசாம் கூறினார்.

"இந்த ஆய்வு மாநிலம் முழுவதும் உள்ள பொதுச் சந்தைகள், விவசாய சந்தைகள் மற்றும் ஷாப்பிங் சென்டர்கள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.