NATIONAL

கார் மோதி காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது

6 பிப்ரவரி 2024, 4:12 AM
கார் மோதி காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது

ஈப்போ, பிப் 6: ஜாலான் தஞ்சோங் ரம்புத்தான்-கெமோரில் ரோந்து சென்றபோது கார்

மோதியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார். அச்சம்பவம் நடந்து 24 மணி

நேரத்திற்குள் ஓர் ஆணும் பெண்ணும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெற்ற பின்னர் நிச்சயதார்த்தம் முடிந்த 33 மற்றும் 34

வயதுடைய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் என ஈப்போ மாவட்டக் காவல்துறைத்

தலைவர் ஏசிபி யாஹாயா ஹசான் கூறினார்.

சம்பவத்தன்று சந்தேக நபர்கள் இருவரும் பயன்படுத்திய காரையும் காவல்துறையினர்

பறிமுதல் செய்தனர். அதுமட்டுமில்லாமல், சிறுநீர் பரிசோதனையில் கைது செய்யப்பட்ட

ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும் அவர் மீது போதைப்பொருள் உட்பட

17 குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது,`` என்று யாஹாயா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் மீது இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், தடுப்பு

காவலில் வைப்பதற்கான அனுமதியைப் பெற இருவரும் நாளை மாஜிஸ்திரேட்

நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் 34 வயது காவல்துறை அதிகாரியை நீல நிற புரோட்டான் ஐரிஸ் கார்

இரண்டு முறை தாக்கியதில் அவருக்கு விலா எலும்புகள் மற்றும் தோள்பட்டை எலும்புகள்

உடைந்திருப்பது கண்டறியப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக

யாஹாயா கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.