NATIONAL

பள்ளி உதவித்தொகையில் (பிஏபி) பிடித்தம் நடந்தால் கல்வி அமைச்சிடம் புகார் அளிக்க வேண்டும்

2 பிப்ரவரி 2024, 8:35 AM
பள்ளி உதவித்தொகையில் (பிஏபி) பிடித்தம் நடந்தால் கல்வி அமைச்சிடம் புகார் அளிக்க வேண்டும்

ஷா ஆலம், பிப் 2: பள்ளி உதவித்தொகையில் (பிஏபி) பிடித்தம் நடந்தால் மேல் நடவடிக்கைக்காக மலேசிய கல்வி அமைச்சிடம் (கேபிஎம்) உடனடியாகப் புகார் அளிக்குமாறு பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் சுமையைக் குறைக்க பள்ளிகள் RM150 முழுவதையும் ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் விளக்கினார்.

"பிடித்தம் ஏற்பட்டால் கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டும், நாங்கள் விசாரணை செய்வோம். ஏனெனில் தொகை முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அதனால் பிடித்தம் இருந்தால், புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

இன்று யூ ஹுவா இடைநிலைப் பள்ளியில் சிலாங்கூர் ஜேபிஎன் இயக்குநர் டாக்டர் ஜாஃப்ரியிடம் பள்ளி உதவி தொகைக்கான காசோலையை ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் ஃபத்லினாவைச் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

முன்னதாக, தனது மகனின் பள்ளி உதவி தொகையில் RM50 மட்டுமே வழங்கியதாக ஒருவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம் மற்றும் கூட்டுறவுக் கட்டணத்திற்காக சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் RM100 பிடித்தம் செய்ததாக அந்த நபர் கூறினார். கடந்த வாரம், கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் பள்ளி உதவி தொகை பிடித்தம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று கூறியது.

பள்ளிக் கல்வி உதவித் தொகையைப் பற்றிய ஏதேனும் கேள்விகள் அல்லது புகார்கள் இருந்தால் கல்வி அமைச்சகத்தின் பொது புகார் மேலாண்மை அமைப்பு (SISPAA) நாடலாம்.

பட்ஜெட் 2024இல் பள்ளி உதவி தொகை திட்டத்திற்கு RM788.13 மில்லியன் ஒதுக்கப்பட்டது. இது 5.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயனளிக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.