NATIONAL

மனைவியை அடித்ததாக சந்தேக நபர் கைது

1 பிப்ரவரி 2024, 5:23 AM
மனைவியை அடித்ததாக சந்தேக நபர் கைது

கோலாலம்பூர், பிப்1 : வீட்டு வேலைகளுக்கு உதவுமாறு தனது உத்தரவைப் புறக்கணித்ததாக கூறி மனைவியை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், 36 வயதுடைய சந்தேக நபர், வேலையில்லாதவர். அந்நபர் நேற்று மாலை 6.20 மணியளவில் பண்டான் பெர்டானாவில் கைது செய்யப்பட்டார் என அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

காலை 9.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்திற்கு முன்பு, வடிவமைப்பாளராகப் பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் தகராறு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

"சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் மடிக்கணினியைச் சேதப்படுத்தினார் மற்றும் புகார்தாரரின் வலது கையில் காயம் ஏற்படும் வரை தாக்கினார்.

"புகார்தாரர் வீட்டு வேலைக்கு உதவாததால் சந்தேக நபர் கோபமடைந்தார்," என்று அறிக்கை ஒன்றில் முகமட் அசாம் தெரிவித்தார்.

அந்நபர் இப்போது மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளான். மேலும், காயம் ஏற்படுத்தியதற்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 323 மற்றும் பிரிவு 427 மற்றும் குடும்ப வன்முறைச் சட்டப் பிரிவு 18A ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.