NATIONAL

மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்றார்

31 ஜனவரி 2024, 4:36 AM
மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்றார்

கோலாலம்பூர், ஜன 31- மலேசியாவின் 17வது மான்னராக மேன்மை தங்கிய  சுல்தான் இப்ராஹிம்  இன்று பதவியேற்றார். அவர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருவார்.

ஐந்தாண்டு தவணைக் காலத்தை நேற்றுடன் முடித்துக் கொண்ட அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிடமிருந்து  சுல்தான் இப்ராஹிம் இப்பொறுப்பினை ஏற்றார்.

இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய்ரோங் ஸ்ரீயில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் 264வது சிறப்புக் கூட்டத்தின் போது பதவிப் பிரமாண நிகழ்வு  நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவும் துணைப் பேரரசராகப்  பதவியேற்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.