NATIONAL

அல்-சுல்தான் மதிநுட்பம் நிறைந்த ஆட்சியாளர்- சிலாங்கூர் மந்திரி புசார் வர்ணனை

31 ஜனவரி 2024, 2:50 AM
அல்-சுல்தான் மதிநுட்பம் நிறைந்த ஆட்சியாளர்- சிலாங்கூர் மந்திரி புசார் வர்ணனை

ஷா ஆலம், ஜன 31- அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா

பில்லா ஷா நாட்டை விவேகத்துடனும் உயரிய மதிநுட்பத்துடனும் ஆட்சி

புரிந்தவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

வர்ணித்துள்ளார்.

மாட்சிமை தங்கிய பேரரசரின் ஐந்தாண்டு கால ஆட்சி தற்போது நாம்

அனுபவித்து வரும் ஒற்றுமை மற்றும் சுபிட்சத்திற்கு வழி வகுத்தது

என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 16வது பேரரசராக வீற்றிருந்த மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-

சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுக்கும்

16வது பேரரசியராக வீற்றிருந்த மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு

அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவுக்கும் மனப்பூர்வமான

நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக்

பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பேரரசரும் பேரரசியாரும் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற

இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். ‘டவுலாட் துவாங்கு‘ என அவர்

அப்பதிவில் கூறியுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.