NATIONAL

இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி

29 ஜனவரி 2024, 9:28 AM
இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி

ஜோகூர் பாரு, ஜன 29: இன்று காலை கோத்தா திங்கி அருகே ஜாலான் சுங்கை ரெங்கிட்-கோத்தா திங்கி கிலோமீட்டர் 48.8இல் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

காலை 7.25 மணி அளவில் பெரோடுவா மைவி மற்றும் புரோட்டான் ஜென்-2 கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து அவரது தரப்புக்குத் தகவல் கிடைத்தது என்று கோத்தா திங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஹுசின் சமோரா தெரிவித்தார்.

"இறந்தவர்கள் ஜென் -2 காரின் ஓட்டுனர் (46), 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு பேர் மைவி காரில் பயணம் செய்தவர்கள் ஆவர். மேலும், மூவரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது. .

"விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, ஆனால் விபத்துக்குள்ளான வாகனம் கோத்தா திங்கி யிலிருந்து பண்டார் பெனாவார் நோக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது" என அவர் இன்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

பலியான அனைவரின் உடல்களும் கோத்தா திங்கி மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.