NATIONAL

இன்று முதல் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (சாரா) மானியத் திட்டம்  வழங்கப்படும்

29 ஜனவரி 2024, 5:36 AM
இன்று முதல் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (சாரா) மானியத் திட்டம்  வழங்கப்படும்

கோலாலம்பூர், ஜன 29: முதல் கட்டமாக 8.2 மில்லியன் பெறுநர்களுக்குச் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா (STR) உதவி இன்று முதல் வழங்கப்படும்

சும்பாங்கான் தூனாய் ரஹ்மா தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெறுநர்களுக்குத்

தகுதிகள் அடிப்படையில் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் செய்யப்படும் அல்லது

சிம்பானான் நேஷனல் வங்கி (BSN) மூலம் பணமாகச் செலுத்தப்படும்.

RM2,500 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமான பிரிவில் உள்ள

பெறுநர் களுக்கு உதவி தொகை RM500 ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இது கடந்த

ஆண்டு அதிகபட்சமாக RM 300 செலுத்தப்பட்டது.

குடும்ப வருமானம் RM2,501 முதல் RM5,000 வரை கொண்டவர்கள், RM100 முதல்

RM300 வரை பெற தகுதியுடையவர்.

இதற்கிடையில், துணை இல்லாத முதியோர் பிரிவினருக்கான பெறுநர்கள் RM150

மற்றும் திருமணம் ஆகாதவர்கள் RM100 யும் பெறுவார்கள்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.