ECONOMY

ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியத்தை நிராகரிப்பது அரசியல்வாதிகளின் தார்மீக பொறுப்பு

27 ஜனவரி 2024, 9:49 AM
ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியத்தை நிராகரிப்பது அரசியல்வாதிகளின் தார்மீக பொறுப்பு

கோலாலம்பூர், ஜனவரி 27 - பல ஓய்வூதியங்கள் பெறும் அரசியல்வாதிகள் அல்லது அரசு ஊழியர்கள் ஒரே ஒரு ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் தார்மீக பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைத்தார்.

ஏனெனில், மூன்று முதல் நான்கு ஓய்வூதியம் பெறும் முன்னாள் அமைச்சர்கள், மந்திரி புசார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

“தார்மீக அம்சத்தில், மந்திரி அல்லது மந்திரி புசாரின் சம்பளம் பெறுபவர்கள் அல்லது மூன்று அல்லது நான்கு ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள்,நாட்டின்  நிலைமைக்கு ஏற்ப, மற்ற ஓய்வூதியங்களைத் தவிர்த்து,  தாங்களின் தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றலாம். அது அவர்களைப் பொறுத்தது’’ என்றார்.

தேசிய மிருக காட்சியின் (Zoo Negara) சூ நெகாராவின் 60வது ஆண்டு விழாவை, இங்குள்ள டத்தாரான் டத்தோ இஸ்மாயில் ஹட்சனில் இன்று தொடங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட  முன்னாள் பிரதிநிதிகள் கவுன்சில் அமைப்பு (முபாரக்) அறிக்கை ஒன்றில்,  முன்னாள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு, அவர்களுக்கு  அரசாங்கத்தின் பங்களிப்பு அல்லது பணிக்கொடை என அழைக்கப் படுவதால், அது தொடர்ந்து வழங்கப்படும் என்று நம்புவதாக கூறுகிறது.

அது குறித்து பிரதமரிடம் கேட்டபோது, கருத்துத் தெரிவிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அமைப்பு ''முபாரக்'', அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளும் அல்லது முன்மொழிவுகளும் கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் தேவைப்படும் என்று அன்வார் கூறினார்.

“கூட்டாட்சி அரசியலமைப்பு முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட எதையும் மாற்ற அனுமதிக்கவில்லை. அதனால் நாங்கள் தொடங்க விரும்புவது புதிதாக வேலைக்கு அல்லது பதவிகளுக்கு வரக்கூடியவர்களுக்கு  புதிய விதியை அமல்படுத்துவது பற்றி  விவாதிக்கிறோம்.

“இதில் அரசியல் நிலைப் பாடுகளும் அடங்கும், அதுவே அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் நாங்கள் முன்வைக்கும் முன்மொழிவு, ஏனெனில் இது பல திருத்தங்களை உள்ளடக்கியது. எனவே, சட்டத்தில் உள்ள ஒப்பந்தத்துடன் பிணைக்கப் பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப் பட்டிருப்பதால், இருப்பதை நாம் நிறுத்த முடியாது, ”என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.