ECONOMY

அனுமதிக்கப்பட்டதை விட அதிக கையிருப்பு- செலாயாங்கில் 41 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல்

25 ஜனவரி 2024, 2:51 AM
அனுமதிக்கப்பட்டதை விட அதிக கையிருப்பு- செலாயாங்கில் 41 மெட்ரிக் டன் அரிசி பறிமுதல்

புத்ரா ஜெயா, ஜன 25- செலாயாங்கில் உள்ள வளாகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் அரிசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 131,568 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு ரகங்களிலான 41 மெட்ரிக் டன் அரிசியை விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு பறிமுதல் செய்தது.

செலாயாங் வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை அரிசி வியாபார மையங்கள் மீது அரிசி மற்றும் நெல் கண்காணிப்பு அமலாக்கப் பிரிவினர் சோதனை மேற்கொண்டதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அச்சோதனையின் போது வர்த்தக உரிமத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளதை விட கூடுதலாக அரிசியை கையிருப்பை ஒரு வளாகம் வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வர்த்தக வளாகத்திற்கு எதிராக 1994ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 522) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அது தெரிவித்தது.

இந்த நிறுவனம் இரண்டாவது முறையாக இத்தகைய குற்றத்தைப் புரிந்துள்ளதை ஆவணங்கள் காட்டுகின்றன. இரண்டாவது முறையாகப் புரியப்படும் இத்தகைய குற்றங்களுக்கு 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

இந்த பறிமுதல் தொடர்பில் 1996ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது கூறியது.

சட்டம் 522 மற்றும் 1996ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கும்படி அரிசி விற்பனை உரிமத்தை வைத்திருக்கும் அனைத்து தரப்பினரையும் அமைச்சு வலியுறுத்தியது. லைசென்ஸ் விதிகளை மீறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.